தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை: சந்தேக மரணமாக வழக்கு பதிவு - டிஐஜி

DIN

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஐஜி சத்யபிரியா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரி ஊராட்சியில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இங்கு திருத்தணி அருகே தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம், பூசம்மாள் தம்பதியின் மகள் சரளா(17). இங்குள்ள விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் திங்கள்கிழமை காலையில் எழுந்து குளித்தாராம். அதையடுத்து சக தோழிகளுடன் பேசியிருந்துவிட்டு, சிறிதுநேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்குள் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பெற்றோர்களை உள்ளே அனுமதித்து மாணவிகளை உடன் அனுப்பி வைத்தனர். தற்போது மாணவி பலியான சம்பவம் குறித்து காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்திய பிரியா, சார் ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செபாஸ் கல்யாண், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செய்யது யாகூப், டி.எஸ்.பி உள்ளிட்டோர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பள்ளியில் தடயவியல் நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

இதனிடையே திருவள்ளூர் மாணவி தற்கொலை குறித்து சிபிசிஐடிக்கு விசாரிக்கும் என்று திருவள்ளூர் எஸ்.பி. கல்யாண் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ள அறிவுரைப்படி சிபிசிஐடி விசாணை நடத்தும் எனவும் அவர் கூறினார். அதேசமயம்  மாணவி தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஐஜி சத்யபிரியா தெரிவித்துள்ளார். பிளஸ் 2 மாணவியின் உடல் தூக்கிட்ட நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டது. மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி சிறிது நேரத்தில் விசாரிக்க உள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT