கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக அலுவலக பொருள்கள் திருட்டு: சிபிஐக்கு மாற்ற கோரிக்கை

அதிமுக தலைமை அலுவலகத்தில் பொருள்கள் திருடப்பட்ட புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

DIN

அதிமுக தலைமை அலுவலகத்தில் பொருள்கள் திருடப்பட்ட புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருள்கள், பத்திரங்கள் உள்ளிட்டவை திருடிச் சென்றதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ள இபிஎஸ் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், புகாரை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் இன்று மனு அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT