தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது. 

உபரிநீர் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.  கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 16 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதனையடுத்து வெள்ள நீர் உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.

தற்போது தென்மேற்கு பருவமழை சற்று தனித்து உள்ளதால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 தினங்களாக திறக்கப்பட்டு இருந்த உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT