தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு: காங்கிரஸ் புறக்கணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  

DIN

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.     

இந்த எதிர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதே தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானதல்ல எனவும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கிறோம். 

அக்னிபத் திட்டம், அத்தியாவசிய பொருள்களின் மீதான விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், இந்த புறக்கணிப்பு பிரதமர் மோடிக்கு எதிரானதே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானதல்ல எனவும் விளக்கம் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மு.க.அழகிரி, ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஐ.நா. அமைப்புகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை தேவை: இந்தியா வலியுறுத்தல்

2015 கும்பல் தாக்குதல்: குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறும் உ.பி. அரசு

நீட் விலக்கு மசோதா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு

நாளைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை

SCROLL FOR NEXT