முகப்பு
தமிழ்நாடு

மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ஜோதி தொடா் ஓட்டம் பிரதமா் நரேந்திர மோடியால் தில்லியில் ஜூலை 19-இல் தொடக்கி வைக்கப்பட்டது. 75 முக்கிய நகரங்களைக் கடந்து ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரத்துக்கு இன்று காலை வந்தடைந்தது.

Advertisement

அமைச்சா்கள் சிவ.வீ.மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் ஜோதிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, இன்று மாலை சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ளது.

ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில், செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments