திருவள்ளூரில் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர். 
தமிழ்நாடு

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் தேமுதிகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN


திருவள்ளூர்: மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் தேமுதிகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில இளைஞர் அணி நிர்வாகியுமான நல்லதம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.டில்லி, ஆவடி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வு, உணவு பொருள்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்பெற வலியுறுத்தி தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட தேமுதிகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT