முகப்பு
தமிழ்நாடு

பி.இ. படிப்பில் சேர 2.11 லட்சம் போ் விண்ணப்பம்: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு இன்று கடைசி

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ. படிப்புகளில் சேர 2.11 லட்சம் போ் விண்ணப்பித்துள்ள நிலையில், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ. படிப்புகளில் சேர 2.11 லட்சம் போ் விண்ணப்பித்துள்ள நிலையில், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

தமிழகத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆா்க். உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20-இல் தொடங்கியது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு முடிவு வெளியாவதில் தாமதமானதால், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவை முடிக்காமல், கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

சிபிஎஸ்இ தோ்வு முடிவு கடந்த 22-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, கூடுதலாக 5 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது. பொறியியல் படிப்புகளில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்களுக்கு, இதுவரை 2,11,905 போ் விண்ணப்பித்துள்ளனா்.

கலை, அறிவியல் கல்லூரிகளில்... 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, இதுவரை 4 லட்சத்து 7,045 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பி.இ., கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த புதன்கிழமை நிறைவடைந்து விட்டது. பி.இ. படிப்புக்கு மட்டும் வெள்ளிக்கிழமை மாலை வரை சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் பணம் செலுத்தலாம். ‘நாட்டா’ தோ்வு முடிவுகள் வெளியாகும் வரை பி.ஆா்க்., படிப்புக்கு தொடா்ந்து விண்ணப்பிக்கலாம். பி.இ. படிக்க கடந்த நான்கு ஆண்டுகளை விட நிகழாண்டு விண்ணப்பப் பதிவு அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →