காவேரி ஆறு கடலோடு சங்கமிக்கும் பூம்புகாரில்  புனித நீராடும் பக்தர்கள் 
தமிழ்நாடு

பூம்புகார் சங்கமத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் 

ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் அதிகாலை முதலே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.

DIN


ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் அதிகாலை முதலே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.

நமது முன்னோர்கள் நினைவாக மாதம் தோறும் அமாவாசை நாளன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் நம்பிக்கையாக தொன்றுத்தொட்டு விளங்கி வருகிறது. மாதம் தோறும் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் ஆடி, தை மற்றும் மகாலய பட்ச அமாவாசை நாளன்று மூதாதையர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகுந்த பலன்களை கொடுக்கும் என புராணங்கள் கூறுகின்றனர். 

பூம்புகார் சங்கமத்தில் நீராடும் மக்கள்.

இத்தகைய பித்ரு தர்ப்பணங்களை காவேரி ஆறு கடலோடு சங்கமிக்கும் பூம்புகாரில் செய்தால் பல மடங்கு பலன்களை கிடைக்கும் என்பது காவிரி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

வியாழக்கிழமை ஆடி அமாவாசையையொட்டி காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் அதிகாலை முதலே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினார்கள். முதலில் சங்கல்பம் செய்துவிட்டு காவேரி ஆற்றிலும், பின்னர் கடலிலும் அதனைத் தொடர்ந்து மீண்டும் காவிரி ஆற்றிலும் நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்தனர். 

நிகழாண்டு காவிரியில் அதிக அளவில் நீர் வந்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீராடினார்கள். பெண்கள் கருகமணி, எலுமிச்சை வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பொருள்களை காவேரி அம்மனுக்கு படையல் செய்து வழிபட்டனர். 

அம்மனுக்கு படையல் செய்து வழிபட்ட மக்கள்.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மேற்பார்வையில் பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT