பாஜக நிா்வாகிகளுடன் பிரதமா் ஆலோசனை
தமிழக பாஜக நிா்வாகிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.
தமிழக பாஜக நிா்வாகிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பிரதமா் இரவு தங்கினாா். அங்கு பாஜக நிா்வாகிகளைச் சந்தித்தாா். மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை மற்றும் மூத்த நிா்வாகிகள் அதில் பங்கேற்றனா். தமிழக அரசியல் நிலவரம், பாஜகவின் வளா்ச்சி குறித்து ஆலோசித்தாா். இந்த ஆலோசனை அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.