தமிழ்நாடு

பொன் மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்க முடியும்? என பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

DIN

சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்க முடியும்? என பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பு அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்க முடியும்? என பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு எடுப்பார், அவரிடம் முறையிடுங்கள் எனவும் நீதிமன்ற தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT