தமிழ்நாடு

கம்பத்தில் முதியோர் இல்லம் தொடக்கம்

தேனி மாவட்டம் கம்பத்தில் ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிஜி முதியோர் இல்லம் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர்  என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தார்.

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிஜி முதியோர் இல்லம் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர்  என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஸ்ரீபாலகங்காதரநாத சுவாமிஜி முதியோர் இல்லம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார், இணைச்செயலாளர் என்.ஆர்.வசந்தன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் ஜி.ரேணுகாதேவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

முதல்கட்டமாக முதியவர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டது, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆடைகள், அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பொன்ராம், கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், சக்தி வடிவேல், மற்றும் பேராசிரியைகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமியாரும் கைது!

திமுக எம்.பி.க்கள் தவறாமல் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: கனிமொழி

அல்லிப்பூ... மாதுரி ஜெயின்!

குறிஞ்சி மலரே... பிரீத்தி முகுந்தன்!

ஃபிட்னஸ் ஃப்ரீக்... நிகிதா ஷர்மா!

SCROLL FOR NEXT