முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் உள்ள அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு முதல் இரண்டு அலகுகள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  பாதிக்கப்பட்டுள்ளது 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
தூத்துக்குடி அனல் மின் நிலையம்
பகிர்:

தூத்துக்குடியில் உள்ள அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு முதல் இரண்டு அலகுகள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  பாதிக்கப்பட்டுள்ளது 

தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் தலா ஒரு அலகில் 210 என மொத்தம் 1050 மெகாவாட் தினமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம்.

கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் முழுமையாக மின் உற்பத்தி நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக போதிய நிலக்கரி கையிருப்பு  இருந்ததால் நான்கு அலகுகள் மூலம் மின்  உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை  இரவு முதல் மூன்று மற்றும் நான்காவது அலகுகள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால இரண்டு அலகுகள் நிறுத்தப்பட்ட அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தாலும் தூத்துக்குடியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில் அனல் மின் நிலையத்தின் இரண்டு அலகுகளை ஏன் திடீரென்று நிறுத்த வேண்டும் என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.