முகப்பு
தமிழ்நாடு

கடலோரக் காவல் படையினரின் செயல்பாடுகள்: தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு, ரோந்துப் பணிகளை கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநா் வி. எஸ். பதானியா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு, ரோந்துப் பணிகளை கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநா் வி. எஸ். பதானியா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநா் வி.எஸ். பதானியா முதல் முறையாக சென்னைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது, கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரோந்து, கண்காணிப்பு, கடத்தல் தடுப்பு, வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், மீட்புப் பணிகள், தீயணைப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய தளபதி படோலா மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்த அவா், பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து விவரம் கேட்டறிந்தாா். அவா் சனிக்கிழமையும் ஆய்வு மேற்கொள்வாா் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →