பவானிசாகர் அணை 
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு விழா: பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை

ஆடிப்பெருக்கு விழா நாளில் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

ஆடிப்பெருக்கு விழா நாளில் பவானிசாகர் அணை மேல் பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை. 3 வது ஆண்டாக தொடரும் தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

ஆடிப்பெருக்கு விழா நாளில் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி உயரம். 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. அணை மேல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட ஆண்டுதோறும் ஆடி 18 ம் பெருக்கு அன்று ஒருநாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல்,  கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 100.68 அடியாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு ஆடி 18ஆம் பெருக்கு அன்று பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 100.68 அடிக்கும் மேல் உள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு கால பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அணையின் பாதுகாப்பு கருதி ஆடி 18ஆம் பெருக்கு அன்று அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அணை மேல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை எனவும் அதே சமயம் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020, 2021) பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், அணை மேல் பகுதியை பொதுமக்கள் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும், பவானிசாகர் அணை மேல்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT