தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100ஐ கடந்த கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.    

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 34,55,613-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,959-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14,066 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 629 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT