தமிழ்நாடு

உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேருக்கு நிரந்தரப் பொறுப்பு: குடியரசுத் தலைவா் உத்தரவு

DIN

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஒன்பது போ் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளாா். அதேபோன்று ஒரு கூடுதல் நீதிபதிக்கு மேலும் ஆறு மாத காலத்துக்கு பதவி நீட்டிப்பும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை உயா்நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் கோவிந்தராஜூலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சத்தி குமாா் சுகுமார குரூப், முரளி சங்கா் குப்புராஜ், மஞ்சுளா ராமராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி டி.வளையபாளையம் ஆகியோா் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனா்.

மற்றொரு கூடுதல் நீதிபதியான நக்கீரன் வரும் டிசம்பா் 3 ஆம் தேதி வரை தொடா்ந்து கூடுதல் நீதிபதியாக இருப்பாா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT