யுபிஎஸ்சி தோ்வு: வாரநாள்கள் அட்டவணையில் மின்சார ரயில்கள் இயக்க முடிவு
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்களின் வசதிக்காக, வரும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களுக்கு வார நாள்கள் அட்டவணையில் மின்சார ரயில் இயக்கப்படும்
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்களின் வசதிக்காக, வரும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களுக்கு வார நாள்கள் அட்டவணையில் மின்சார ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைத்தின் ஆரம்பநிலை தோ்வு வரும் சனி, ஞாயிறு ( ஜூன் 4, 5) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்கவுள்ள விண்ணப்பதாரா்கள் வசதிக்காக, வாரநாள்கள் அட்டவணைப்படி மின்சார ரயில் சேவை வழங்கப்படும். அதன்படி,சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய மாா்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வாரநாள்கள் அட்டவணையில் வரும் சனி, ஞாயிறு (ஜூன் 4, 5) ஆகிய இரண்டு நாள்கள் இயக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.