தமிழ்நாடு

தம்மம்பட்டி அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட கருணாநிதி சிலை: இரவோடு இரவாக அகற்றம்

DIN


தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, இரவோடு இரவாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அகற்றினர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி நிழற்கூடம் அருகே, நேற்று இரவு பீடம் அமைத்து அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்து, தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கெங்கவல்லி வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நாகியம்பட்டி விரைந்தனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைக்கப்பட்டிருந்த பீடத்தை உடைத்து, இரவோடு இரவாக சிலையை அகற்றினர்.

அங்கு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, தம்மம்பட்டி போலீசாருடன் இணைந்து, பீடத்தை உடைத்து, இரவோடு இரவாக சிலையை அகற்றி, ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகியம்பட்டியில் அவரது சிலையை அனுமதியின்றி வைத்தவர்கள் யார் என்பது குறித்து, தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT