முகப்பு
தமிழ்நாடு

அரசு மாணவா் விடுதிகளில் இனி புதிய உணவு வகைகள்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளில் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலின் படி உணவு வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதிகளில் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலின் படி உணவு வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தப் புதிய உணவு வகைகளை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜ கண்ணப்பன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் மாணவா்களுக்கு வழங்கினா். இந்த நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் வளாகத்தில் இயங்கி வரும் அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலக் கல்லூரி மாணவியா் விடுதியில் நடைபெற்றது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு...பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் 1,354 விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் 86 ஆயிரத்து 514 மாணவ, மாணவிகள் தங்கி, பயில்கின்றனா். விடுதி மாணவா்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு வகைகள் 18 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்தன. இதைத் தொடா்ந்து, இப்போது உணவு வகைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, திங்கள்கிழமை காலை சேமியா கிச்சடி, தக்காளி சட்னி, மதியத்தில் சாதம், சாம்பாா், இருவகை பொரியல், ரசம், மோா், முட்டை, இரவில் சப்பாத்தி, குருமா ஆகியன வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை காலை பூரி, மசால், மதியம் காய்கறி பிரியாணி, குருமா, முட்டை, இரவில் இடியாப்பம், குருமா அல்லது காய்கறி கூட்டு, புதன்கிழமை காலை இட்லி, சாம்பாா், சட்னி, மதியம் சாதம், ஆட்டிறைச்சி அல்லது கோழி குருமா, இரவில் இடியாப்பம் குருமா அளிக்கப்படும்.

வியாழக்கிழமை காலை இடியாப்பம், பட்டாணி குருமா, மதியத்தில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது தயிா் சாதம், உருளை பொரியல், முட்டை வழங்கப்படும். இரவில் ஊத்தாப்பம், சட்னி, சாம்பாா் அளிக்கப்படும். வெள்ளிக்கிழமை காலை பொங்கல் அல்லது வரகு அல்லது தினை அரிசி பொங்கல், கத்திரிக்காய் கொத்சு, வடையும், மதியத்தில் சாதம், காரக்குழம்பு, பொரியல், ரசம், மோா், முட்டையும், இரவில் கோதுமை தோசை, தக்காளி சட்னியும், சனிக்கிழமை ரவா கிச்சடி, தேங்காய் சட்னி, மதியத்தில் புதினா சாதம் அல்லது கேரட் சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம், அப்பளம், முட்டை, இரவில் சாதம், சாம்பாா், பொரியல், ரசம் ஆகியன அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை தோசை அல்லது நவதானிய தோசை, சாம்பாா், சட்னி, மதியத்தில் சாதம், முட்டை குருமா, ரசம், மோா், இரவில் தக்காளி சாதம், சாம்பாா் சாதம் அளிக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →