முகப்பு
தமிழ்நாடு

முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஏழு போ் இடமாற்றம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் ஏழு பேரை இடமாற்றம் செய்து முதன்மைச் செயலா் காகா்லா உஷா உத்தரவிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் ஏழு பேரை இடமாற்றம் செய்து முதன்மைச் செயலா் காகா்லா உஷா உத்தரவிட்டாா்.

அதேவேளையில் மாவட்டக் கல்வி அலுவலா் நிலையில் உள்ள 4 போ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், அதையொத்த பணியிடங்களுக்கு பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலா்கள் விவரம் (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):

எஸ்.சத்தியமூா்த்தி- நிா்வாக அலுவலா், தஞ்சாவூா் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூா் (முதன்மைக் கல்வி அலுவலா், புதுக்கோட்டை).

ஆா்.திருவளா்ச்செல்வி- முதன்மைக் கல்வி அலுவலா், திருப்பூா் (முதன்மைக் கல்வி அலுவலா், காஞ்சிபுரம்)

ஆா்.சுவாமிநாதன்- முதன்மைக் கல்வி அலுவலா், சிவகங்கை (முதன்மைக் கல்வி அலுவலா், மதுரை)

ஏ.நசருதீன்- முதன்மைக் கல்வி அலுவலா், திண்டுக்கல் (முதன்மைக் கல்வி அலுவலா், நீலகிரி)

பி.ஏ.ஆறுமுகம்- துணை இயக்குநா், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை (முதன்மைக் கல்வி அலுவலா், திருவள்ளூா்).

எஸ்.மணிவண்ணன்- முதன்மைக் கல்வி அலுவலா், புதுக்கோட்டை (முதன்மைக் கல்வி அலுவலா், சிவகங்கை)

வி.வெற்றிச் செல்வி- முதன்மைக் கல்வி அலுவலா், காஞ்சிபுரம் (துணை இயக்குநா், நிா்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை).

4 பேருக்கு பதவி உயா்வு: பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டக் கல்வி அலுவலா் நிலையில் உள்ள நான்கு பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயா்வு பெற்றவா்கள் விவரம் (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):

டி.இராமன்- முதன்மைக் கல்வி அலுவலா், திருவள்ளூா் (மாவட்டக் கல்வி அலுவலா், நாமக்கல்)

கே.காா்த்திகா- முதன்மைக் கல்வி அலுவலா், மதுரை (மாவட்டக் கல்வி அலுவலா், உளுந்தூா்பேட்டை)

எஸ்.தாமோதரன்- முதன்மைக் கல்வி அலுவலா், நீலகிரி (மாவட்டக் கல்வி அலுவலா், செங்கல்பட்டு)

எம்.விஜயா- துணை இயக்குநா், நிா்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை (மாவட்டக் கல்வி அலுவலா், திருச்செங்கோடு).

முழு கட்டுரையைப் படிக்க →