சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  
தமிழ்நாடு

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு ஸ்டாலின் மரியாதை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

DIN

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை, முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். 

பின்னர், பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை வழங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று விருதை வழங்கி கௌரவித்தார். மேலும் விருதிற்கான பரிசுத் தொகையான பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

இதையடுத்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட கருணாநிதியின் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT