முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 7 ஜூன், 2022 at 1:43 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:58 PM

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

Advertisement

07.06.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். 

ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

08.06.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். 

09.06.22, 10.06.22: தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

11.06.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

திருவண்ணாமலை, திருச்சி நகரம், பெருங்களூர், தொண்டி, பொன்மலை, ஆம்பூர், அன்னவாசல் தலா 7, அதிராம்பட்டினம் 6, அவினாசி, தேன்கனிக்கோட்டை, லால்குடி, ராசிபுரம் தலா 5, வட்டானம், கடவூர், தண்டராம்பேட்டை, புதுக்கோட்டை, புடலூர், பெருந்துறை, சோழவந்தான் தலா 4, பண்ருட்டி, கீழ்பென்னாத்தூர், ஆலங்காயம், மணமேல்குடி, ஆண்டிப்பட்டி, வேப்பூர் தலா 3, அரவக்குறிச்சி, கீரனூர், ஏற்காடு, வாடிப்பட்டி, தக்கலை, குழித்துறை தலா 2, மீமிசல், உதகமண்டலம், திருப்பூர், மணல்மேடு, குடியாத்தம், குளச்சல், பெலாந்துறை, நாட்றம்பள்ளி, கறம்பக்குடி, கொடுமுடி, கோபிசெட்டிபாளையம் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

07.06.22: தமிழக கடலோரப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.