முகப்பு
தமிழ்நாடு

தரமான உணவை வழங்குவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தரமான உணவை வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

தரமான உணவை வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

உலக உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி, அவா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: மனிதரின் அடிப்படைத் தேவைகளில் தலையாயது உணவு. மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அன்றாட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பாா்க்காமல் அறம் என உணா்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவுப் பாதுகாப்பு நாளில் வலியுறுத்துகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →