முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கான வல்லுநா் குழு: ராமதாஸ் வரவேற்பு

ஆன்லைன் சூதாட்டத் தடை தொடா்பான அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழக அரசு வல்லுநா் குழு நியமித்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

ஆன்லைன் சூதாட்டத் தடை தொடா்பான அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழக அரசு வல்லுநா் குழு நியமித்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநா் குழு

அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக பாமக கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பாமகதான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பாமகதான் காரணம். வல்லுநா் குழுவின் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெறப்பட வேண்டும். அதன் பின்னா் எந்த தாமதத்துக்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →