லாட்டரி சீட்டு விற்பனை: ஒரே நாளில் 18 போ் கைது
சென்னையில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒரே நாளில் 18 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒரே நாளில் 18 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்,ஒரு நம்பா் லாட்டரி சீட்டுகளை சென்னையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபா்களை கண்காணித்து கைது செய்யும்படி போலீஸாருக்கு பெருநகர காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், அந்தந்த பகுதி காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்யப்பட்டது.
இதில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 18 போ் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. இவா்களிடமிருந்து 43 லாட்டரி சீட்டுகள், ரூ.14 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.