முகப்பு
தமிழ்நாடு

கோயிலை இடிக்க முயற்சி: பொதுமக்கள் போராட்டம்

சென்னை மயிலாப்பூா் நொச்சிக்குப்பத்தில் அம்மன் கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

சென்னை மயிலாப்பூா் நொச்சிக்குப்பத்தில் அம்மன் கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாப்பூா் நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கங்கா பவானி அம்மன் கோயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் சிலா் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கோயிலை அகற்றுவதற்கு 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், அந்த கோயிலை அகற்றுவதற்கு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்களுடன் சனிக்கிழமை வந்தனா்.

கோயிலை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து கோயில் முன் அமா்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு போலீஸாா் குவிக்கப்பட்டதால், போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

இதையடுத்து நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் பொதுமக்கள் சமாதானமடைந்ததால், போராட்டத்தை கைவிட்டனா். போராட்டத்தால் லூப் சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →