அன்புமணி ராமதாஸ் 
தமிழ்நாடு

மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது என்று  பா.ம.கா. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

DIN

சென்னை: மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை வரவேற்கத்தக்கது என்று  பா.ம.கா. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாஸ் மேலும் தெரிவித்ததாவது:

மது மற்றும் புகையிலைப் பழக்கங்களிலிருந்து மீண்டு வாழ நினைப்போரையும், சிறுவர்களையும் மது மற்றும் புகையிலைப் பழக்கங்களை நோக்கி இந்த மறைமுக விளம்பரங்கள் இழுக்கின்றன. மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் அதிகரிப்பதற்கு இத்தகைய மறைமுக விளம்பரங்கள் தான் காரணம்.

சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும்,  சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில்  புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது சமூகத் தீமைகளைத் தடுக்கும்.

மது மற்றும் புகையிலை தொடர்பான மறைமுக விளம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர்ந்து போராடி வருகின்றன. இப்போது மறைமுக விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திடல்களில் வைக்கப்படும் மது மற்றும் புகையிலை சார்ந்த மறைமுக விளம்பரங்கள், நேரடி ஒளிபரப்பின் மூலம் கோடிக்கணக்கானோரை  சென்றடைந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.கா. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT