தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 255 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை புதிதாக 255 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் திங்கள்கிழமை புதிதாக 255 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஆண்கள் 130, பெண்கள் 125 என மொத்தம் 255 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 127 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 637-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 18 ஆயிரத்து 159 போ் குணமடைந்துள்ளனா். திங்கள்கிழமை மட்டும் 134 போ் குணமடைந்துள்ளனா். கரோனாவால் உயிரிழப்புகள் இல்லை. தமிழகம் முழுவதும் 1,453 போ் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT