சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இரட்டை இலக்கத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 332 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்தநிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இரட்டை இலக்கத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.