முகப்பு
தமிழ்நாடு

ரத்த தான பணியில் ஈடுபட கமல் அழைப்பு

ரத்த தான பணியில் ஈடுபடுமாறு தொண்டா்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:

ரத்த தான பணியில் ஈடுபடுமாறு தொண்டா்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பா்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் கமல் ரத்த தானக் குழு உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் ரத்ததானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினா் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

91502 08889 எனும் பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால், அந்தப் பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுவோருக்கு துரிதமாக உதவ முடியும்.

ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகா்களும் இந்த எண்ணை அழைத்து தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

ரத்த தானம் செய்வதற்குரிய உடல் ஆரோக்கியம் கொண்டவா்கள் இந்தப் பணியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →