கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

DIN

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி இல்லாததால் இந்த கூட்டத்தை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் தான் ஒரு அதிமுக நிர்வாகி என்ற முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார். 

அதேநேரத்தில், சூரியமூர்த்தி தற்போது கட்சியில் இல்லை என்றும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் கூறி ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்து கூட்டாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இதையடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் மனு மீது 4 வார காலத்திற்குள் சூரியமூர்த்தி பதில் அளிக்கக் கூறி வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருப்பதால் முன்கூட்டியே அடுத்த விசாரணை கோரிய சூரியமூர்த்தியின் கோரிக்கையை சென்னை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

இதன் மூலமாக வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறத் தடையில்லை என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT