குப்பை மறுசுழற்சி: சென்னை மாநகராட்சிக்கு ரூ.64.11 லட்சம் வருவாய்
குப்பை மறுசுழற்சி மூலம் இரு வாரங்களில் ரூ.64.11 லட்சம் வருவாய் திரட்டியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
குப்பை மறுசுழற்சி மூலம் இரு வாரங்களில் ரூ.64.11 லட்சம் வருவாய் திரட்டியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னையில் தினசரி 51 லட்சம் கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் கழிவுகள் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, கடந்த மே 25 முதல் ஜூன் 10 வரை 14,361 கிலோ உரங்கள் விற்பனை செய்யப்பட்டு ரூ.1.33 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது மக்காத உலா் கழிவுகளானது வள மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. கடந்த மே 27 முதல் ஜூன் 10 வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உலா் கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு, ரூ.62.78 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.
அந்த வகையில், ஒட்டுமொத்தமாக, குப்பையில் இருந்து ரூ.64.11 லட்சம் மாநகராட்சிக்கு வருவாயாக கிடைத்துள்ளது.