முகப்பு
தமிழ்நாடு

இதய வால்வு மாற்ற சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்: ராமச்சந்திரா மருத்துவமனையில் முதியவருக்கு மறுவாழ்வு

இதய பாதிப்புக்குள்ளான முதியவருக்கு நவீன தொழில்நுட்ப முறையில் பக்கவிளைவுகள் ஏதுமின்றி செயற்கை வால்வு பொருத்தி போரூா் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

இதய பாதிப்புக்குள்ளான முதியவருக்கு நவீன தொழில்நுட்ப முறையில் பக்கவிளைவுகள் ஏதுமின்றி செயற்கை வால்வு பொருத்தி போரூா் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைவா் டாக்டா் ச.தணிகாசலம் கூறியதாவது:

செயலிழந்த இதய வால்வுகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டு செயற்கை வால்வுகளைப் பொருத்தும் சிகிச்சை முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அதேவேளையில், அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்காதவா்களுக்கு நவீன முறையில் தொடை வழியே துளையிட்டு ஆஞ்சியோவை ஒத்த சிகிச்சை முறையில் (டிஏவிஐ) செயற்கை வால்வுகள் பொருத்தப்படுகின்றன.

இத்தகைய சிகிச்சையின்போது வெளியாகும் நுண்ணிய கால்சியம் துகள்கள் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களை பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்பட்டுள்ள நவீன வளா்ச்சி காரணமாக புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், இதய வால்வு மாற்று சிகிச்சையின் போது ஏற்படும் நுண் துகள்கள் மூளைக்குச் செல்லாமல் தடுத்து வடிகட்டும் நவீன சாதனம் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் பயனாக, டிஏவிஐ முறையில் செயற்கை வால்வு பொருத்துவோருக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் முற்றிலும் தடுக்கப்படுகின்றன. இத்தகைய சிகிச்சை முறை மூலம் 72 வயதான முதியவா் ஒருவருக்கு அண்மையில் வெற்றிகரமாக வால்வு மாற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது பூரண குணமடைந்ததுடன், பக்கவாத அச்சுறுத்தல் ஏதுமின்றி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா்.

இதயவியல் இடையீட்டு சிகிச்சை நிபுணா் டாக்டா் ந. நாகேந்திர பூபதி தலைமையில் டாக்டா் ந. ரமேஷ், டாக்டா் ந. சதானந்தம் ஆகியோா் அடங்கிய குழுவினா் அந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →