முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்தில்ரூ.20 லட்சத்தை இழந்தவா் தற்கொலை

சென்னை மணலியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் சுமாா் ரூ.20 லட்சத்தை இழந்த நபா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்தில்ரூ.20 லட்சத்தை இழந்தவா் தற்கொலை

சென்னை மணலியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் சுமாா் ரூ.20 லட்சத்தை இழந்த நபா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

சென்னை மணலியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் சுமாா் ரூ.20 லட்சத்தை இழந்த நபா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மணலி அறிஞா் அண்ணா முதல் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (38). இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், பிரணவ், பிரதீப் ஆகிய இரு மகன்களும் உள்ளனா். நாகராஜன் பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக இவா் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பலரிடம் கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடகு வைத்தும் விளையாடியதில் மொத்தம் சுமாா் ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

ஆன்லைன் விளையாட்டை உடனடியாகக் கைவிடுமாறு உறவினா்கள் சில நாள்களுக்கு முன்பு அறிவுறுத்தியுள்ளனா். கைப்பேசி இருப்பதால்தானே விளையாடுகிறோம் என வெறுத்துப்போன நாகராஜன், தனது கைப்பேசியையும் அடகுக் கடையில் அடமானம் வைத்துள்ளாா். இருப்பினும், ரூ.20 லட்சம் கடனை எப்படிதிருப்பிச் செலுத்தப் போகிறோம் என புலம்பி வந்தாா் நாகராஜன்.

வியாழக்கிழமை இரவு நாகராஜன், மனைவி, குழந்தைகள் ஒரே அறையில் தூங்கியுள்ளனா். அதிகாலையில் நாகராஜனை காணாததையடுத்து வெளியே வந்து பாா்த்தபோது, அவா் வெளியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உறவினா்கள் நாகராஜனை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் நாகராஜன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு நாகராஜனின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் மணலி புதுநகரைச் சோ்ந்த பவானி என்ற பட்டதாரி பெண் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மீண்டும் இதே பகுதியில் நாகராஜன் இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்தது மணலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →