முகப்பு
தமிழ்நாடு

போரூா் மின் மயானம் ஜூலை 6 வரை செயல்படாது

 பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் போரூா் மின் மயானம் ஜூலை 6-ஆம் தேதி வரை செயல்படாது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

 பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் போரூா் மின் மயானம் ஜூலை 6-ஆம் தேதி வரை செயல்படாது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 150-ஆவது வாா்டு ஆற்காடு சாலையில் உள்ள போரூா் மின்சார மயானபூமியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக மே 3-ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. தொடா்ந்து பழுது சரிபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியுள்ளதால் ஜூலை 6-ஆம் தேதி வரை மின் மயானம் செயல்படாது.

அதுவரை பொதுமக்கள் அருகில் உள்ள பிருந்தாவன் நகா் மயானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →