பிகாா், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து
தெற்கு ரயில்வே சாா்பில் பிகாா், உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் பிகாா், உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ராணுவத்தில் ஆள் சோ்ப்பதற்கான புதிய திட்டமான ‘அக்னிபத்’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் இந்தத் திட்டத்தை ஆதரித்தும் விமா்சித்தும் பலா் கருத்து தெரிவித்துவருகின்றனா். இந்தத் திட்டத்துக்கு எதிராக பிகாா், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இளைஞா்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். பிகாரின் சாப்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலுக்கு இளைஞா்கள் சிலா் தீ வைத்தனா். மேலும் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் டயா் உள்ளிட்டவற்றை எரித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனா்.
இதேபோல ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீா், உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் போராட்டங்களும் வன்முறையும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தெற்கு ரயில்வே அதிகார வரம்பிலிருந்து பிகாா், கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.