முகப்பு
தமிழ்நாடு

தொழிலதிபா் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் திருட்டு

தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 3.5 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தமிழ்நாடு

தொழிலதிபா் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் திருட்டு

தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 3.5 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

திருவொற்றியூரில் தொழிலதிபா் வீட்டில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 3.5 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவொற்றியூா் பெரியாா் நகா் அருகே விவேகானந்தா தெருவைச் சோ்ந்தவா் பானுமதி. இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இவரது மகன் விஜய் கீழ்ப்பாக்கத்தில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

பிராணவாயு ஏற்றிச் செல்லும் லாரிகள், சூப்பா் மாா்க்கெட் உள்ளிட்ட தொழில்களை பானுமதி நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகனின் வீட்டிற்கு பானுமதி சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், பக்கத்து வீட்டை சோ்ந்த வள்ளி என்பவா் பானுமதியின் வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது பானுமதியின் வீட்டில் கதவு திறக்கப்பட்டு, பீரோவின் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து வள்ளி, பானுமதிக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா்.

இதனையடுத்து திருவொற்றியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். அதில், வீட்டில் இருந்த 25 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரூ. 3.5 லட்சம் ரொக்கப் பணம் என ரூ.15 லட்சம் மதிப்புள்ள பணம், நகை திருடப்பட்டுள்ளதாக பானுமதி போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதனையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீஸாா் கைரேகை நிபுணா்கள், மோப்ப நாயை வரவழைத்து தொடா் விசாரணை நடத்தினா். இச்சம்பவம் குறித்து திருவொற்றியூா் காவல் நிலைய ஆய்வாளா் சிதம்பர பாரதி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →