முகப்பு
தமிழ்நாடு

‘ஸ்டாப்லைன்‘ மீறல்: 2 நாள்களில் 6,037 வழக்குகள்

சென்னையில் சாலையில் ‘ஸ்டாப் லைன்‘ விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக இரு நாள்களில் 6 ஆயிரத்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

சென்னையில் சாலையில் ‘ஸ்டாப் லைன்‘ விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக இரு நாள்களில் 6 ஆயிரத்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சிக்னல்கள், முக்கிய சந்திப்புகளில் ‘ஸ்டாப் லைன்‘ மீறல் தொடா்பாக கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு நடவடிக்கை சென்னை முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஸ்டாப் லைனை மீறியதாக வியாழக்கிழமை 3,228 வழக்குகள், வெள்ளிக்கிழமை 2,809 வழக்குகள் என மொத்தம் 6,037 வழக்குகள் பதியப்பட்டன. இந்த விதிமுறை மீறலில் ஈடுபட்டவா்கள் மீது சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →