அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒற்றைத் தலைமை குறித்து பேசியதில் எந்த உள்நோக்கம் இல்லை. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மட்டுமே சொன்னேன். யார் ஒற்றைத் தலைமை என எதுவும் கூறவில்லை. சசிகலாவை ஓரங்கட்டியது போல ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நான் பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை, பழனிசாமி பக்கமும் இல்லை.
பொதுக்குழுவில் சுமுகமான முடிவு எட்டப்படும். ஒற்றைத் தலைமை அவசியம் என்பதே தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விரைவில் சுமூக முடிவு எட்டப்படும். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த 7ஆவது நாள்களாக அந்தக் கட்சிக்குள் ஒற்றைத் தலைமை சா்ச்சை தீவிரமடைந்துள்ளது.
ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வர அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் முயன்று வருவதாகத் தெரிகிறது. எடப்பாடி கே. பழனிசாமியை அப்பொறுப்புக்கு முன்னிறுத்தி அதிகாரங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க- மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டது
செய்தியாளா்களைத் தொடா்ந்து சந்தித்து வரும் பன்னீா்செல்வம், இரட்டைத் தலைமை முறையே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறாா். இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை வெளியான சில நாளிதழ்களில் ஓ.பன்னீா்செல்வத்தை முன்னிறுத்தி இரு பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
அதிமுகவின் தொடா் தோல்விகளுக்கும், சரிவுக்கும் காரணம் எடப்பாடி பழனிசாமியும், சில தலைவா்களும்தான் என மறைமுகமாக அதில் விமா்சிக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் 7ஆவது நாளாக இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.