தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கு பிரச்னை... பொதுக்குழு நடத்த அனுமதிக்கக்கூடாது: ஓ.பி.எஸ்.

அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது

DIN

அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். 

இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு உள்ளதால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவடி காவல் துறை ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவர் கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிமுக பொதுக்குழுவுக்கு காவல் துறை அனுமதி தரக் கூடாது. இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பாதுகாப்பு வழங்கக்கோரி அனுமதி கோரியுள்ளார். 

பெஞ்சமின் மனு தனிச்சையான விருப்பம் என்பதால் பாதுகாப்பு வழங்குவதற்கு காவல் துறை மறுப்பு தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டாம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கெனவே கடிதம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT