தமிழ்நாடு

சிறைக் கைதிகளிடம் காவலர்கள் படும் துன்பம்: வைரலாகும் விடியோ

DIN

சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு கைதியை அழைத்துச் செல்லும் எஸ்கார்ட் காவலர்கள், சிறைக் கைதிகளால் படும் துன்பம் விடியோவாக சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது.

விசாரணை சிறைக் கைதிகளை மாவட்ட கிளை சிறைகளில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கோ அல்லது அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்ல அந்தந்த மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் அவர்களை பாதுகாப்பில் எடுத்து காவல்துறை வாகனங்களில் பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அல்லது மருத்துவமனைக்கு அல்லது அவர்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.  இதை காவல் பணியில் எஸ்கார்ட் என அழைப்பார்கள் 

இந்த எஸ்கார்டு காவல்துறை ஒரு சிறைக் கைதிக்கு டீ வாங்கிக் கொடுக்காததால் விடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டிருக்கிறார்கள் 

இந்த விடியோவில் ஒரு கைதி எஸ்கார்ட் காவலரிடம் டீ கேட்கிறார். ஆனால் டீ வாங்கி கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையோ, சட்ட விதியோ எதுவும்  இல்லை இருந்த போதிலும் ஒரு காவலரை குறி வைத்து தகாத வார்த்தைகளால் சிறைக் கைதி திட்டி வருகிறார் தொடர்ந்து காவலரை தகாத வார்த்தைகளால் கைதி பேசி வருகிறார்

ஆனால் காவலர்கள் பாதுகாப்பு கருதி  கைதியை அழைத்து வரும் வாகனத்தில் இருக்கும் அனைத்து காவலர்கள்  சிறைக் கைதியை சமாதானப்படுத்தி அந்த காவலரை அமைதியாக்கி கொண்டே வருகிறார்கள் 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து காவலர்களிடம் கேட்டபொழுது எஸ்கார்ட் எனப்படும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆயுதப்படை காவலர்கள் இதைவிட மோசமான சூழ்நிலைகளை எல்லாம் கைதிகளிடம் அனுபவிக்கிறார்கள் என வேதனையுடன் கூறுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT