தமிழ்நாடு

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை(ஜூன் 23) தொடக்கம்!

நடப்பு ஆண்டு தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 

DIN

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை(ஜூன் 23) தொடங்குகிறது. 

2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற  அக்டோபர் 24 ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 

இதையொட்டி, வெளியூரில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நாளை(ஜூன் 23) தொடங்குகிறது. 

அக்டோபர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை செல்லவிருப்போர் நாளை(ஜூன் 23) முதல் ரயிகளில் முன்பதிவு செய்யலாம். வழக்கமாக காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். 

அக்டோபர் 22, சனிக்கிழமை செல்வோருக்கு ஜூன் 24 ஆம் தேதியும், 

அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை செல்வோருக்கு ஜூன் 25 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. 

அதுபோல வெளியூர்களில் இருந்து பணியிடங்களுக்கு திரும்புவதற்கு, 

அக்டோபர் 24, திங்கள்கிழமைக்கு - ஜூன் 26 ஆம் தேதியும் 

அக்டோபர் 25, செவ்வாய்க்கிழமை  திரும்புவோருக்கு - ஜூன் 27 ஆம் தேதியும் தொடர்ந்து அடுத்ததடுத்த நாள்களுக்கு முன்பதிவு தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

ஹேக்கிங் என்பது என்ன? எப்படி நடக்கிறது?

SCROLL FOR NEXT