பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேர இணையம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in அல்லது www.tngasa.org இணையத்தள முகவரிகள் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 50-ஐ இணைய வழி வங்கிச் சேவை, வங்கி அட்டைகள் மூலம் செலுத்த்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை கடந்த 20ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. இதில் 93.76 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பிஏ, பி.காம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர வரும் 22-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று உயா்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், அவரவா் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உயா்கல்வித்துறையால் அமைக்கப்பட்டுள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம் என்றும் 044-28260098 , 044-28271911 என்ற எண்களுக்கு அழைக்கலாம் என்றும் உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.