தமிழ்நாடு

ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு அடுத்த பொதுக்குழு: கே.பி. முனுசாமி

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு அடுத்த பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்தார். 

DIN


சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு அடுத்த பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது அதனுடன் இணைந்து 23 வரைவு தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்தார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், 23 வரைவு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.

அப்போது, அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த 23 வரைவு தீர்மானங்களும் முன்மொழியப்பட்டது. ஆனால், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக சி.வி. சண்முகம் அறிவித்தார். இதனால், பொதுக் குழுக் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பேச வந்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, 23 வரைவு தீர்மானங்களையும் இந்த பொதுக் குழு நிராகரிப்பதாக அறிவித்தார். மேலும், ஒற்றைத் தலைமை என்ற தீர்மானத்தோடு அடுத்த பொதுக் குழு நடைபெறும். அந்த பொதுக் குழுவில், ஒற்றைத் தலைமை என்ற தீர்மானத்துடன் இணைத்து இந்த 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

மேலும், எப்போது ஒற்றைத் தலைமை என்ற தீர்மானம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்படுகிறேதா அப்போதுதான் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதிமுகவின் அடுத்த பொதுக் குழுவில் ஒற்றைத்தலைமை என்ற தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இது அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT