கோப்புப்படம் 
தமிழ்நாடு

காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது: வைத்திலிங்கம்

சென்னையில் இன்று காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது என்று கூறியிருக்கிறார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.

DIN

சென்னை:  சென்னையில் இன்று காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது என்று கூறியிருக்கிறார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூச்சல் குழப்பத்துடன் நிறைவு பெற்ற நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இதையும் படிக்க.. முதல் சுற்றில் இ.பி.எஸ். வெற்றி?

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியதாவது, இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர உள்ளோம்.

அதிமுக பொதுக் குழுவில் கத்தியவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல, கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள். தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பொதுக்குழுவே செல்லாதக் கூட்டமாகிவிட்டது. காட்டுமிராண்டித்தனமாக பொதுக் குழு நடந்துள்ளது. பொதுக் குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது.

பொதுக்குழுவில் இன்று அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. கட்சியின் அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும் என்றும் வைத்திலிங்கம் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, வைத்திலிங்கத்துடன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜேடிசி பிடிபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், கூட்டுத் தலைமைக்கு ஒப்புக் கொண்டால் சமாதானத்துக்குத் தயார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT