தமிழ்நாடு

இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு மோடியின் கர்வத்தை உடைக்கும்: ராகுல் ட்வீட்

தேசத்தின் இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

DIN

தேசத்தின் இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு கொண்டுள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்தின் கீழ் கப்பற் படை, விமானப் படையில் சேர விரும்புவோர், இன்று(ஜூன் 24) முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்க பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவ வேலைக்கு ஒரு ஆள்சேர்ப்பு கூட நடைபெறவில்லை. 

ஆண்டுகள் வாரியான ஆள்சேர்ப்பு விவரம்: 
2018-19: 53,431
2019-20: 80,572
2020-21: 0
2021-22: 0

4 ஆண்டு ஒப்பந்த அடிப்பையில் அக்னிவீரர் திட்டத்தைக் கொண்டு வந்து நாட்டுக்கு சேவை செய்ய காத்திருந்த இளைஞர்களின் கனவுகளை உடைத்து விட்டீர்கள். இந்த இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வெளிவரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் மோடியின் கர்வத்தை உடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT