முகப்பு
தமிழ்நாடு

நாளை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நாளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:38 AM
பகிர்:

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நாளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைமைக்கழம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 – திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில்லாமல் தலைமைக்கழகம் எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுக. ஒன்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக அதிமுகவில் பிரச்னை எழுந்துள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 23ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சலசலப்புடன் அரை மணி நேரத்திலேயே நிறைவு பெற்றது. இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.