கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்ததுள்ளது. 

DIN

சென்னை: பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்ததுள்ளது. 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே 10 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 8.3 லட்சம் மாணவா்கள் எழுதினா். இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, தோ்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளன. அதில், 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

பொதுச்தேர்வு எழுதிய மாணவிகளளில் 94.99% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் 84.86% பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் 95.56% மாணாக்கர்கள் தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 2020 மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி 96.04%ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 5.97% குறைந்தது. 

இந்நிலையில் இந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த  மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்ததுள்ளது.  அதன்படி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உடனடி தேர்வுக்கு www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்திலோ அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்களிலோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரேட்டா் நொய்டாவில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் பலி

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

SCROLL FOR NEXT