தமிழ்நாடு

பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் விண்ணப்பிக்கலாம்!

DIN


பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே 10 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 8,83,882 பேர் எழுதினர். இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, தேர்வு முடிவுகளை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்.

அதில், 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளிகலில் படித்த 83.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழில் மொத்தம் 18 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

மொழிப்பாடத்தில் மொத்தம் 28 பேர் முழுமையான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலோ, அரசு தேர்வுகள் சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT