ஓபிஎஸ் அணியிலிருந்து 9 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு
ஓபிஎஸ் அணியிலிருந்து 9 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆத
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார் தலைமையில் 9 பேர் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை இன்று காலை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...
Advertisement
Advertisement
பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்று அணி மாறி எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவுக்கரத்தை நீட்டியுள்னர்.
இதன் மூலம், 2,665 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில், 2,432 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.